ஆன்மிக களஞ்சியம்

செட்டிக்கோவில் என அழைக்கப்படும் காளத்தீஸ்வரர் கோவில் தல வரலாறு

Published On 2024-05-02 11:43 GMT   |   Update On 2024-05-02 11:43 GMT
  • செட்டிமார்கள் இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து பூஜித்து வந்தனர்.
  • காலப்போக்கில் எல்லோராலும் அன்புடன் “செட்டிக்கோவில்” என்றே அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு பலவகையினாலும் சிறப்புற்று, தன்னை நாடிவந்தோருக்கு எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானின் திருவருளால் ஈர்க்கப்பட்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து "திருமூலர்" கூறியவாறு (இதயக்கோவில்) பூஜித்து வந்தனர்.

இவ்வாறு பூஜிக்கப் பெற்று வந்த தெய்வங்களுக்கு திருக்கோவில் கட்டிட எண்ணம் கொண்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் மனம் உருகி இறைவன் திருவருளை வேண்டிட இறைவனும் அவர்களின் மேலான அன்புக்கு கட்டுப்பட்டவனாக திருவருள் வழங்கினார்.

இறையருள் கிடைக்கப் பெற்ற அவர்கள் நகரின் நடுவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பெருங்கோவில் எழுப்பி அதில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானுடன் பரிவார மூர்த்திகளையும் அமைத்தனர்.

அதுமட்டுமின்றி சிவபெருமானின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் விக்கிரகத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தனர்.

பன்னெடுங்காலத்திற்கு முன்னரே சைவமும் வைணவமும் ஒன்று என்பதற்கு இலக்கணமாக புதுவை வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் சான்றாக இருந்துள்ளார்கள்.

இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு போற்றப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர சுவாமி ஸ்ரீதேவி -பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காலப்போக்கில் எல்லோராலும் அன்புடனும் பெருமிதத்துடனும் "செட்டிக்கோவில்" என்றே அழைக்கப்படுகின்றது.

Tags:    

Similar News