ஆன்மிக களஞ்சியம்

தீபம் ஏற்றினால் தோஷம் விலகும்

Published On 2024-01-03 12:14 GMT   |   Update On 2024-01-03 12:14 GMT
  • உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் அங்காரகன்.
  • மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும்.

அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்வித்துச் சிவப்பு வஸ்திரம், பவழம், சிவப்பு அலரி

என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்

துவரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து, தூப தீப

நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரக கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.

உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் அங்காரகன்.

பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,4,7,8,12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர்.

ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும்.

மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும்.

செவ்வாய் தோசம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும்.

செவ்வாய் கிழமை உபவாசம் இருந்து, ஏதாவது கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும்.

செவ்வாய் அரசியலில் புகழ்பெற

சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே

குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ

மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி

அங்கா ரகனே அவதிகள் நீக்கு

Tags:    

Similar News