ஆன்மிக களஞ்சியம்
null

தேவேந்திரன் திருடிய பூக்கள்!

Published On 2023-08-18 13:01 GMT   |   Update On 2023-08-18 13:04 GMT
  • அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.
  • ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.

தேவேந்திரன் திருடிய பூக்கள்

புராண காலத்தில் "ருக்மாங்கதன்" என்ற பெயருடைய மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி செய்து வந்தான்.

அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.

அவனுக்கு சொந்தமான ஒரு அழகிய நந்தவனத்தில் உலகில் உள்ள பேரழகு வாய்ந்த மலர்களை எல்லாம் வரவழைத்து அங்கே பயிர் செய்தான்.

அதை தன் கண் போல் காத்து வளர்த்து வந்தான்.

ஒரு சமயம், தேவேந்திரன் தனக்கு ஒரு யாகத்திற்கு பூசை செய்ய பூக்கள் வேண்டுமென்று கருதிய போது ருக்மாங்கதனின் பூந்தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு தேவ கண்ணரசனை அனுப்பி அங்கிருந்து வினோதமான பூக்களை திருடிக் கொண்டு வரச் செய்தான்.

தினமும் பூக்கள் திருட்டுப் போவதைக் கண்ட ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.

ஆனால் அவரால் திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான். கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.

அதன் பிறகே ருக்மாங்கதன் சமரசம் அடைந்தார்.

Tags:    

Similar News