- வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம்.
- இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது.
தெய்வ சிந்தனை தரும் சஷ்டி விரதம்
கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.
சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும்.
இந்த தெய்வ சிந்தனை வருடத்தில் ஒருமுறை, ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ, இல்லை ஆறு நாளோ இருந்தால், நம் மனதுடன் உடலும் சுத்தமாகிறது.
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது.
விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது.
மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான்.
கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது.
உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது.
முருகனது கருணை எங்கும், எப்பொழுதும் பொங்கி வழிகிறது.