- “மருதமலை மாமணியே முருகையா” என்று அனைவரையும் பாட வைக்க பெருமை தேவருக்கு உண்டு.
- தமிழ்நாடு மக்கள் மருதமலையைத் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்தவர் தேவர் என்று சொல்லலாம்.
மருதமலை என்று சொன்னதும் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் எம்.எம்.ஏ. சாண்டோ சின்னப்ப தேவர் தான் பலருக்கும் நினைவுக்கு வருவார்.
தமிழ்நாடு மக்கள் மருதமலையைத் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்தவர் தேவர் என்று சொல்லலாம்.
மருதமலை சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட வைத்தது அவரது முருக சேவை என்றே கூற வேண்டும்.
"மருதமலை மாமணியே முருகையா" என்று அனைவரையும் பாட வைக்க பெருமை தேவருக்கு உண்டு.
மருதமலையின் அடிவாரத்திலே நம்மை வரவேற்கும் தலைநிமிர்ந்து நிற்கிற முன்மண்டபக் கோபுரம் தோவர் பிலிம்ஸ் உபாயம்.
அடிவாரம் தொடங்கி மருதமலை முருகன் சன்னதி வரையிலும் மின்சார விளக்கு, மலைப்பாதை இவை எல்லாம் தேவர் மனமுவந்து செய்த தர்ம காரியங்கள்.
தேவர் மண்டபம் முருக தரிசனம் வேண்டி வருபவர்கள் தங்கி இருக்கவும், விசேஷ தினங்களில் அம்மடத்தில் அமுது பொங்குதல், அன்னம் அளித்தல் ஆகிய காரியங்களுக்கு பயனுள்ளதாக அமைத்துத் தந்துள்ளார்.
மருதாச மூர்த்தியின் அர்த்த மண்டபத்தில் உள்ள கதவு அமைத்துத் தந்ததும் அவரே. முடிக் கொட்டகை அருகில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு அறைகள் ஆகியவைகளை பக்தர்களின் நலத்தையும் சவுகரியத்தையும் முன்னிட்டு அமைத்துத் தந்துள்ளார்.
தேவர் முருகனுக்கு செய்த திருப்பணிகளில் முக்கியமானது மலைப்படிகளில் இரவிலும் மக்கள் சென்றுவர ஏதுவாக மின்விளக்குகள் தமது பொருட் செலவிலேயே 1963-ல் முடித்துக் கொடுத்தது மட்டுமின்றி படியேற வலுவற்றவர்களும், வசதி படைத்தவர்கள் கார் முதிதலய வாகனங்களிலும் மேலே சென்று வருதற்கு ரூபாய் 3 லட்சம் செலவில் 1 மைல் தொலைவில் உள்ள மலைப்பாதையை அமைத்துக் கொடுத்தது மிகப்பெரிய பணியாகும்.
மூலவருக்கு ரூபாய் பத்தாயிரம் செலவில் தங்கக் கவசம் செய்து கொடுத்தும் உள்ளார் இவை எல்லாம் தேவருக்கு முருகன் மீது உள்ள பக்தியையேக் காட்டுகிறது.