ஆன்மிக களஞ்சியம்

துவாரகாமயி அணையாத் தணல்

Published On 2023-11-29 12:35 GMT   |   Update On 2023-11-29 12:35 GMT
  • அவரை இந்துவா,முஸ்லீமா என யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
  • ஏனெனில் மசூதியை பாபா “துவாரகாமயி” என அழைப்பார்.

துவாரகா மயியில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது.

அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதி இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது.

துவாரகா மயி மசூதியில் சாய்பாபா சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

இதன் அருகில் உள்ள இடம் சாவடி என்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாள் இரவும் தனது பக்தர்களை இங்கு சந்திப்பார்.

ஒரு முறை மசூதியில் விளக்கேற்ற வழக்கமாக எண்ணெய் தரும் வியாபாரி எண்ணெய் தர

மறுத்துவிட்டதால் தண்ணீரிலேயே விளக்கெரிய வைத்தார்.

அன்று முதல் அவரது புகழ் மேலும் பரவியது. ராமநவமி, சந்தனக்கூடு

ஆகிய இந்து முஸ்லிம் விழாக்களை இவ்வூரில் நடத்தி வந்தார்.

இந்து சடங்குகள் அந்த மசூதியில் செய்யப்பட்டு வந்தது.

அவரை இந்துவா,முஸ்லீமா என யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

ஏனெனில் மசூதியை பாபா "துவாரகாமயி" என அழைப்பார்.

துனி எனும் அணையாத அக்னியை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உதி என்ற சாம்பலை'

நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவார்.

சீரடியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி,

அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.

Tags:    

Similar News