ஈசனின் இதய அக்னியிலிருந்து உருவான 64 பைரவர்கள்
- சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
- இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.
சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.
ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர்.
முனிவரின் சாபத்தில் இருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
சனிக்கு அருள்பாலித்து ஈஸ்வர பட்டம் கொடுத்து சனீஸ்வரராக்கி நவக்கிரகங்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.
இப்படி பைரவர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.
இவரைக் கால பைரவர், மார்த்தாண்டவ பைரவர், சேத்ரபாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவபெருமானாரை வேண்டினார்கள்.
ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்கினார்.
அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டில் இருந்து அறுபத்து நான்காக மாறியது.
அதோடு அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியது.
இதுவே பைரவ அவதாரத்தின் தனித்துவம் ஆகும்.
இதனால் மகிழ்வடைந்த தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ஆனால் தற்சமயம் நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது.