ஆன்மிக களஞ்சியம்

கர்வம் நீங்கிய கந்தர்வன் எலி வாகனம் ஆன கதை

Published On 2024-06-28 11:45 GMT   |   Update On 2024-06-28 11:45 GMT
  • பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.
  • கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.

இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான்.

அதனால் வெகுண்ட அவர் அவனை எலியாக மாற சாபம் தந்தார்.

எலியாக மாறிய கந்தருவன் சீற்றம் கொண்டு முனிவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தான். பராசர முனிவரின் ஆசிரமத்தை பாழ்படுத்தி விட்டான்.

பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.

கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.

அன்று முதல் விநாயகர் பெருமானுக்கு "மூஷிக வாகனன்" என்று பெயர் வந்தது.

உகந்த இலைகள்

முல்லை, எருக்கு இலை, கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், விஷ்ணு கிரந்தி, ஊமத்தை, மாதுளை, இலந்தை, தேவதாரு, வெள்ளை அருகம்புல், மருவு, வன்னி, அரசு, நாயுருவி, ஜாதி மல்லிகை, கண்டங்கத்தரி, தாழை, அரளி, அகத்தி இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.

Tags:    

Similar News