ஆன்மிக களஞ்சியம்

எலுமிச்சையின் எண்ணிலடங்கா பலன்கள்

Published On 2024-05-20 11:29 GMT   |   Update On 2024-05-20 11:29 GMT
  • துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி பூஜிப்பது நல்ல பலன் தரும்.
  • அதுவும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்.

பழங்களில் எலுமிச்சை பழம் தான் வழிபாடுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

பூஜைக்கு வாழைப் பழங்கள் வைக்கப்படுவது உண்டு.

ஆனாலும் இறைவன் சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களுக்கும் எலுமிச்சை பழம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

அம்மனுக்கு மலர் மாலைகள் அணிவிப்பர். தங்க மாலைகள் போடுவர்.

எலுமிச்சம்பழ மாலை அணிவிப்பதும் உண்டு.

திருஷ்டி சுற்றிப் போடுவது என்றால் எலுமிச்சம் பழம்தான்.

புதிய வாகனம் வாங்கும்போது பூஜை எல்லாம் செய்துவிட்டு அதன் சக்கரத்தின் அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதும் உண்டு.

ஆலயங்களில் எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் இப்போதும் உண்டு.

மேல் மலையனூரில் எலுமிச்சம் பழ வழிபாடு மிக அதிக அளவில் உள்ளது.

பதினொன்று, ஐம்பத்தொன்று, நூற்றியொன்று, ஆயிரத்தொன்று என்று எலுமிச்சை விளக்கேற்றிப் பலரும் வழிபடுவர்.

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி பூஜிப்பது நல்ல பலன் தரும்.

அதுவும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் அற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.

கொரோனா பாதித்தவர்களுக்கு வைட்டமின் சி, டி சத்து கொண்ட உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள சொல்கிறார்கள்.

எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

எனவே வீட்டில் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தி பூஜை செய்துவிட்டு அதை உணவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய வைரஸ் பரவல் காலத்தில் எலுமிச்சம் பழம் அதிகம் தேவை.


Tags:    

Similar News