ஆன்மிக களஞ்சியம்

ஈசன் ஆடிய தாண்டவங்கள்

Published On 2024-02-10 12:27 GMT   |   Update On 2024-02-10 12:27 GMT
  • ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.
  • அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.

ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார்.

அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவைப் போன்று பளிச்சிட்டது.

பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார்.

அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார்.

இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.

எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார்.

ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.

சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும். ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42ம் ஆகும்.

Tags:    

Similar News