ஆன்மிக களஞ்சியம்

எதிரிகள் தொல்லையை தடுக்கும் மனித வடிவ நரசிம்மர்!

Published On 2023-08-25 13:11 GMT   |   Update On 2023-08-25 13:11 GMT
  • மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர்
  • குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

எதிரிகள் தொல்லையை தடுக்கும் மனித வடிவ நரசிம்மர்

இரணியனை வதம் செய்வதற்காக சிம்ம முகம், மனித உடலுடன் மகாவிஷ்ணு ஒரு தூணில் இருந்து வெளிப்பட்டார்.

மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர் என பெயர் பெற்றார்.

திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருள்பாலிக்கிறார்.

முற்காலத்தில் நரசிம்ம பக்தர்கள் சிலர் தங்கள் பகுதியில் நரசிம்மருக்கு கோயில் கட்ட விரும்பினர்.

எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்கு தெரியவில்லை.

இவ்வேளையில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.

அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர்.

பக்தரின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்க முகம் இல்லாமல், மனித முகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர்.

ஆனால் சுவாமிக்கு 'நரசிம்மர்' என்று பெயர் சூட்டினர்.

பத்ம விமானத்தின் கீழ் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் அபயவரத முத்திரைகள் காட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

இங்குள்ள ஒரு தூணில் படைப்புச் சிற்பமாக சிவலிங்கம் உள்ளது.

குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

கார்த்திகை பவுர்ணமியன்று விசேஷ பூஜை நடக்கும். ஆயுள் அதிகரிக்க, திருமண தடை நீங்க சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒளியும். உடல்நலம் உண்டாகும்.

Tags:    

Similar News