ஆன்மிக களஞ்சியம்
null

கருட தரிசனத்தில் கலந்துகொண்டு முன்னோர்களின் ஆசிகளை பெறுங்கள்!

Published On 2024-07-31 11:28 GMT   |   Update On 2024-08-01 06:44 GMT
  • பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும்.
  • இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

திருப்பதி பிரம்மோற்சவம் வைபவத்தில் மற்ற ஸேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா?

செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள்.

அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம்.

அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன்.

அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர்.

அவர்களை தியானிப்பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்' என்பது ஐதீகம்.

இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு.

இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும்.

தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோஸ்வத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

Tags:    

Similar News