ஆன்மிக களஞ்சியம்

காயத்ரி மந்திரம்-எத்தனை நிமிடங்கள் என்ன பலன்?

Published On 2024-06-23 11:45 GMT   |   Update On 2024-06-23 11:45 GMT
  • 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.
  • 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

* மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

* ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

* 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

* 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

* 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

* 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் 'க்ரே' பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

* இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News