ஆன்மிக களஞ்சியம்

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்........!!

Published On 2024-06-23 08:34 GMT   |   Update On 2024-06-23 08:34 GMT
  • இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, 'மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892&-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் 'நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் 'பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் 'காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் 'ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் 'யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் 'உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்' என்பதாகும்.

Tags:    

Similar News