ஆன்மிக களஞ்சியம்

இடையனாய் வழிகாட்டிய பெருமானுக்கு சோறு, பாகற்காய் குழம்பு தந்த ஹரதத்தர்

Published On 2024-05-16 11:44 GMT   |   Update On 2024-05-16 11:44 GMT
  • என் பெயர் மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.
  • நான் உங்களுக்கு துணையாக வருகிறேன் என்று கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான்.

ஒருசமயம் ஹரதத்தர் திருவாவடுதுறைக்குச் சென்று மாசிலாமணீசுவரரைத் தரிசித்து விட்டுத் திரும்புகையில் இருட்டி விட்டது.

கரிய மேகங்கள் சூழ்ந்தபடியால் வழியும் தெளிவாக தெரியாததால் சுவாமியை தியானித்தார்.

அப்போது கையில் விளக்கேந்தியவாறு ஒரு பசு மேய்க்கும் இடையன் ஒருவன் அவரிடம் வந்து, நான் இவ்வூரில் வசிக்கும் இடையன்.

என் பெயர் மாசிலாமணி. எனது பசுவைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்.

தாங்கள் மாபெரும் சிவஞானி. நான் உங்களுக்கு துணையாக வருகிறேன் என்று கூறி விளக்கை ஏந்தியபடியே அவருக்கு முன் நடந்தான்.

கஞ்சனூர் வந்ததும் அவரிடம் அந்த அந்த இடையன் விடை பெற்றுக் கொண்ட போது, ஹரதத்தர் தன் வீடிலிருந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் அவனிடம் தந்து உண்ணச் சொன்னார்.

அதற்கு அவன் அதை ஏற்றுக்கொண்டு தனது ஊர் திரும்பிய பிறகு உண்ணுவதாக கூறிவிட்டு விடை பெற்றுச்சென்றான்.

இடையன் வடிவில் வந்த மாசிலாமணீசுவரர், திருவாவடுதுறையிலுள்ள தனது ஆலயத்திற்குள் எழுந்தருளித் தாம் கொண்டு வந்த சோற்றையும் பாகற்காய் குழம்பையும் சன்னதியில் சிதறி விட்டு மறைந்தருளினார்.

மறுநாள் காலையில் அர்ச்சகர் இவ்வாறு சிதறிக் கிடப்பனவற்றைக் கண்டு பதறினார்.

அதிகாரிகள், ஆலய பரிசாரகர்களை அழைத்து உண்மையைக் கூறாவிட்டால் சவுக்கடி விழும் என்றனர்.

அப்போது பெருமான் அசரீரியாக, நேற்று இரவு அர்த்த ஜாம தரிசனம் செய்துவிட்டு கஞ்சனூர் திரும்பிய ஹரதத்தனோடு யாமே துணையாக சென்று அங்கு அவன் தந்தவற்றைப் பெற்றுக்கொண்டு வந்து இங்கு சிதறுவித்தோம் என்றருளினார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஹரதத்தர், பெருமாளின் திருவருளை நினைந்து ஆனந்த பரவசம் அடைந்தார்.

Tags:    

Similar News