ஆன்மிக களஞ்சியம்

இனிக்கும் வேப்ப மரம்

Published On 2023-11-27 12:28 GMT   |   Update On 2023-11-27 12:28 GMT
  • பாபா சீரடி திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
  • இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

பாபா சீரடி திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.

இந்த வேப்பமர இலைகள் சாய்பாபா அருளால் கசப்புத் தன்மையை இழந்ததாக கூறப்படுகிறது.

பாபா ஷிர்டியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார்.

அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது.

இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

மூன்று முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள்.

தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள்.

Tags:    

Similar News