இறைவனை மகிழ்விக்கும் புஷ்ப யாகங்கள்
- ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.
- ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.
வீடுகளில் பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய மந்திரம் இது.
பூஜையை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற மந்திரமான,
"யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி சந்திரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத யோபாம் மாயதனம் வேத
ஆயதனவான் பவதி"
என்று சொல்லிக் கொண்டே மலர்களை போட்டு பூஜையை நிறைவு செய்வது நல்லது.
மலர் யாகம், மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியோ, புஷ்பயாகமோ செய்யப்படுகின்ற போது இறைவன் அகமகிழ்ந்து வேண்டிய வரம் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.
ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.
சில நாட்களில் பற்றாக்குறையாகி விடும். சில நாட்களில் கிடைத்தும் திருப்தியாக இருக்காது.
இது போன்ற குறைகள் நீங்குவதற்காக புஷ்ப யாகங்கள் செய்யப்படுகின்றன.
அந்த சமயங்களில் உயர் ரக மலர்களைக் கொண்டு, ஆசார அனுஷ்டானமான வேத விற்பன்னர்களைக் கொண்டு, முதலில் மந்திரங்களைக் கொண்டு மலர்கள் அக்னிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் இறைவனது திருவடி தொடங்கி, திருமுடி வரை மலர்கள் சொரியப்படும். இது திருப்பதியில் மிக விசேஷம்.
என்றாலும், இப்போது ஏராளமான ஆலயங்களில் பக்தர்களின் புஷ்ப கைங்கர்யத்தால் மிகச் சிறப்பாகவே புஷ்ப யாகங்கள் நடைபெறுகின்றன.