இறைவனின் வாகனங்கள் உணர்த்தும் உண்மை
- ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
- இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.
ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக மக்களுக்கும், கோவிலுக்கு வர இயலாத முதியோர்கள், நோயாளிகளுக்காகவும் அருள் பாலிப்பதற்காக
இறைவன் திருவீதி எழுந்தருள்கிறார்.
அப்படி வீதி உலா வரும் இறைவனுக்காக பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உலக உயிர்களின் நன்மைக்காக இறைவன் ஆற்றிவரும் ஐந்தொழில்களின் தத்துவக் கருத்துக்களை
உணர்த்தும் நோக்கில் வாகனங்களும் உருவாக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் கற்பக விருட்சம், சூரிய சந்திரப் பிரபை,
இடப வாகனம், நாக வாகனம், பல்லக்கு லிங்கார வட்ட சொரூபப் பிரபை, யானை வாகனம், தேர்,
குதிரை வாகனம், அதிகார நந்தி பூத வாகனம், ராவணனின் திருக்கயிலை வாகனம் முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.
இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.
அவரை விழாக்காலங்களில் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு முடித்து
வாகனங்களில் ஏற்றி அவர் அழகை ரசித்து இன்புற்று ஈடு இணையற்ற பேரின்பம் பெற வழிபாடு செய்கிறோம்.
இதில் தீபத்திருவிழா உள்ளிட்ட உற்சவ நாட்களில் பத்து நாட்களும் அண்ணாமலையார்
வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கின்றார்.
அவ்வாகனங்களின் உட்பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்