null
பார்வதி தேவியே பிரதிஷ்டை செய்த அமுதலிங்கம்
- கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள்.
- அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.
பிரகாரங்களுடனும், கோபுரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ள அன்னை அகிலாண்டேசுவரியின் திருக்கோவில் ஈசன் கோவிலினும் அருள்பாலிக்கும் பெருமையுடையதாகும்.
இதற்குக் காரணம் ஈசனை அகிலாண்டேசுவரி தானே பிரதிஷ்டை செய்தாள்.
பார்வதி தேவியே அகிலாண்டேசுவரி என்ற திருப்பெயரில் இங்கு சில காலம் தங்கியிருந்து அமுதலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தாள்.
எனவே அன்னை அகிலாண்டேசுவரியின் திருவருட்சக்தி முதன்மையும் பெருமையும் உடையதாயுள்ளது.
அன்னை அகிலாண்டேவரி அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும், பின்னரும் கன்னி என மறைபேசும் ஆனந்த வடி மயிலாக விளங்குகின்றாள்.
கருணை நோக்குடன் கருவறையில் காட்சியளிக்கும் அன்னையின் எதிரில், சங்கராச்சாரிய சுவாமிகள் வைத்த விநாயகர், உள்ளார்.
அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.
கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள்.