ஆன்மிக களஞ்சியம்

ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி

Published On 2023-08-19 11:26 GMT   |   Update On 2023-08-19 11:26 GMT
  • மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
  • மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!

ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.

அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.

உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.

மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி

மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.

மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.

புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.

தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.

Tags:    

Similar News