null
- மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு.
- பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான்.
ஆடி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை "யோகினி ஏகாதசி' என்றும், வளர்பிறை ஏகாதசியை "சயினி ஏகாதசி' என்றும் குறிப்பிடுவர்.
குபேரனுக்கு புஷ்பம் கொடுக்கும் ஹேமமாலி என்பவன் தன் மனைவி மீது கொண்ட காதலால் தனது பணியை மறந்து போனான்.
அதனால் குபேரனின் சாபத்திற்கு ஆளாகி குஷ்ட நோயால் அவதிப்பட்டான்.
பின்னர் யோகினி ஏகாதசி அன்று விரதமிருந்து நோயிலிருந்து மீண்டான்.
இதுவே யோகினி ஏகாதசியின் சிறப்பு.
மகாபலியின் கர்வத்தை அடக்க திரிவிக்ரமனாகத் தோன்றினார் மகாவிஷ்ணு.
மகாபலியை அடக்கி பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு திருப்பாற்கடலுக்குச் சென்றவர் ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் பாம்பணையில் சயனித்தார்.
எனவே இது சயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சயினி ஏகாதசியை "ஆஷாட ஏகாதசி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
பாலையும், தயிரையும் காவடி போல் தோளில் சுமந்து கொண்டு, "பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாதா விட்டலா" என்றும் ""விட்டல் விட்டல் ஜெய் ஜெய் விட்டல்" என்றும் கோஷமிட்டுக் கொண்டு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனை தரிசிப்பார்கள்.