ஆன்மிக களஞ்சியம்

காளை மாட்டை அடித்து விரட்டியதால் வந்த வினை

Published On 2024-05-17 11:30 GMT   |   Update On 2024-05-17 11:30 GMT
  • வண்டிக்காரர் ஹரதத்தரிடம், பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார்.
  • வரும் வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின என்றார்.

ஹரதத்தரின் தாயார் ஒரு சமயம் வீட்டு வாசலில் நெல்லை உலற வைத்திருந்த போது ஒரு காளை மாடு அங்கு வந்து அந்த நெல்லைச் சிறிது தின்றது.

மிஞ்சியிருந்த நெல்லை அங்கு வந்த ஹரதத்தர் குவித்து வைத்து, அக்காளை மாடு உண்ணுமாறு உதவினார்.

இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஹரதத்தரின் தாயார் நெல்லை மாடு தின்று விட்டதே என்று எண்ணி அதைக் கோலால் அடித்து விரட்டினாள்.

அப்போது அங்கு வந்த ஹரதத்தர், " காளை மாடு ஈசுவரனின் வாகனம் அல்லவா? இப்படி வாயில்லா ஜீவனை அடிக் கலாமா? என்றார்.

சிறுது நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் சிவலிங்க பூபதி கொடுத்து அனுப்பிய நெல் மூட்டைகள் வந்து இறங்கின.

வண்டிக்காரர் ஹரதத்தரிடம், பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார்.

வரும் வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின என்றார்.

அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு ஹரதத்தர், தாயாரிடம் அம்மா, நீ உலர்த்திய நெல்லில் பாதியைக் காளை தின்றது என்று அதை அடித்தாயல்லவா? நமக்கும் பாதி நெல்லே வந்து சேர்ந்தது என்றார்.

Tags:    

Similar News