ஆன்மிக களஞ்சியம்
காம அசுரனை காலில் மிதித்த நிலையில் காட்சிதரும் முருகர்
- முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
- ஜம்புகேஸ்வரர் அமைந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது.
முருகனின் பாதத்தில் அசுரன்
முருகப் பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக் கரையில் இருக்கிறார்.
இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக் கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார்.
முருகனும் காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில் ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார்.
முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
நவ துளை ஜன்னல்
ஜம்புகேஸ்வரர் அமைந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது.
ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.
பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.
இந்த ஜன்னல் மனிதன் தன் உடலில் உள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.