ஆன்மிக களஞ்சியம்

காமாட்சி அம்மன் கோவில் அமைப்பு

Published On 2023-09-24 12:01 GMT   |   Update On 2023-09-24 12:01 GMT
  • சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
  • சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

இது அதிஸ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு(6) அங்கங்களை உடையதாக அமைந்துள்ளது.

அதிட்டானம் என்னும் அடிப்பகுதி உபானம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை என்னும் ஆறு உறுப்புகளை உடையது.

அதிட்டானத்தைச் சுற்றிலும் விஜயநகரக் கால கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதிட்டானத்தின் மேல் அம்மன் கோவில் சுவர் பகுதி எழுப்பப்பட்டுள்ளது.

சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.

கருவறைச் சுவரில் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளில் தேவகோஷ்ட மாடங்கள் அலங்கரிக்கின்றன.

மாடங்களின் பக்கங்களில் அரைத் தூண்களும், மேற்புறம், கூரை, கிரீவம், சாலை வடிவுடைய சிகரம் ஆகிய பகுதிகளுடன் கோஷ்ட மாடங்கள் காணப்படுகின்றன.

சுவரின் பக்கங்களில் உள்ள அகாரை என்னும் பகுதியில் ஒற்றைக் கால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.

சுவரின் மேல் கூரை என்னும் பிரஸ்தரம் அமைந்துள்ளது.

இது எழுதகம், கபோதகம், வியாளம் என்னும் மூன்று உறுப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.

கூரை மேல் விமானத்தளம் அமைந்துள்ளது.

இத்தளங்கள் கர்ணக்கூடு, சாலை, பஞ்சரம், என்னும் உறுப்புகளுடன் மாறி மாறி அலங்கரிக்கின்றன.

தளங்களைச் சுற்றிலும் அழகிய சிற்ப வடிவங்கள் கதை உருவங்களாகக் காணப்படுகின்றன.

விமான கிரீவம் செவ்வக வடிவுடையது.

கிரீவத்தின் மேல் சாலை வடிவுடைய சிகரம் அலங்கரிக்கின்றது.

சிகரங்களின் பக்கங்களில் மகாநாசிகள் அலங்கரிக்கின்றன.

சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

இவ்விதம் அம்மன் கோவில் விமானம் அதிட்டானத்திலிருந்து பிரஸ்தனம் வரை கருங்கல் திருப்பணியாக அமைந்துள்ளது.

அதன் மேல் உள்ள தளங்களும், கிரீவம் மற்றும் சிகரப்பகுதிகள் செங்கல்லும் சுதையும் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

விமானம் சுமார் 30 அடிக்கும் மேல் உயரம் உடையது. கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விமானம் எழுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News