ஆன்மிக களஞ்சியம்
காரிய சித்தி அருளும் விநாயகர் புரட்டாசி விரதம்
- இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும்.
- சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஸித்தி விநாயக விரதம்:
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது.
பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.
சஷ்டி - லலிதா விரதம்:
புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.
அமுக்தாபரண விரதம்:
புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள்.
இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும்.
சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.