- கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.
- திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.
கார்த்திகை தீபம் அது சாதாரண தீபமல்ல.
ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம்.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த
திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோவில்களில் பிரகாசமான
தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.
ஏனென்றால் இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி நரம்புகளெல்லாம்
சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள்.
அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும்.
அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான்.
இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார் எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.