ஆன்மிக களஞ்சியம்

கலைநயம் மிக்க சிற்பங்கள்

Published On 2024-05-02 11:50 GMT   |   Update On 2024-05-02 11:50 GMT
  • பித்தளைத் தகடுகள் வேய்ந்து வாயில் படிகள், பீடம் யாவும் விளங்குகின்றன.
  • கூத்தப்பெருமான் திருமேனியின் பின்புறம் "அண்டச்சக்கரம்" சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது.

24 கால் மண்டபத்தின் தென்பகுதி சைவ நெறி விளங்குவதாகவும் வடபகுதி வைணவ நெறி சிறப்பதாகவும் நேர்த்தியான கலைநயம் மிக்க சிற்பங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது.

வரதராசு பெருமாள் தென்கலை சார்ந்த கோவிலாக அமைந்திருப்பினும், மூலவருக்குரிய திருவாட்சி சங்கு, சக்கரங்களுடன் கூடிய வடகலை - செய்து வைக்கப்பட்டுள்ளது ஒரு புதுமையே.

வடகலை, தென்கலை வேறுபாடு அறியாத இறைவன் வேறுபட்டுள்ள மக்களுக்கு உணர்த்துவதாக இது அமைந்துள்ளது.

காசி விசுவநாதர் சன்னதியின் கிழக்கு வாயிலின் முன்புறம் பால விநாயகரும், கையில் வச்சிராயுதம் தாங்கிய பால கந்தப்பெருமானும் அமைந்துள்ளனர்.

எங்கும் நிறைந்த இறைவன் எந்நேரமும் தாண்டவமாடும் சபா மண்டபமானது, பஞ்சபூதங்களைப் படிகளாக்கி, ஐம்புலன்களைக் காலடியில் போட்டு, ஆறு ஆதார சக்திகளுக்கு மேற்பட்ட நிலையில் விளங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றிலும் கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டு சுவர்கள் புதிய பொலிவோடு காட்சி அளிக்கின்றன.

பித்தளைத் தகடுகள் வேய்ந்து வாயில் படிகள், பீடம் யாவும் விளங்குகின்றன.

கூத்தப்பெருமான் திருமேனியின் பின்புறம் "அண்டச்சக்கரம்" சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது.

பழனியாண்டவர் (பாலதண்டாயுதபாணி) கிழக்கு நோக்கியவாறு இங்கு நின்றிருக்கின்றார்.

பஞ்சமூர்த்திகளுக்குரிய மூன்று அலங்கார மண்டபங்கள் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன.

காளத்தீசுவரர் கோவிலில் மிக அதிக அளவில் 8 விநாயகர் சிலைகளும், 4 பெரிய காண்டாமணிகளும், 2 சந்தனம் அரைக்கும் பீடங்களுடன் கூடிய கற்களும் காணப்படுகின்றன.

Tags:    

Similar News