கள்ளனுக்கு அருள்பாலித்த மங்களநாதர்
- அதை கேட்ட மலைக்கள்ளன் நாகமணியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான்.
- நாகமணியை திருடினால் எந்த வழியில் தப்பிக்கலாம் என்று நினைத்து கோவிலை பலமுறை வலம் வந்தான்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மலைக்கள்ளன் என்பவன் ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்தான்.
அவன் முனிவர்களிடம் நல்லவன் போல் நடித்து அவர்கள் ஏமாறும் சமயத்தில் அவர்களைக் கொன்று களவாடி வந்தான்.
சிவன் கோவில்களில் கொள்ளையடித்தவன் நாடுவிட்டு சென்றுபாண்டிய நாட்டு கொள்ளையடித்த பொருள்களை மலைபோல் குவித்து வைத்திருந்தான்.
என்றாலும் அவனுக்கு நிம்மதியில்லை. கொலை, கொள்ளையடிக்கும் தொழிலைவிட்டு நல்ல மனிதனாகத் திருந்தி வாழ வேண்டும் என்று நினைத்தான்.
அதற்கு முன்பு சேதுக் கடற்கரையில் தீர்த்தமாடி தொழிலை விடவேண்டும் என்று நினைத்து தீர்த்தமாட சேதுக்கரை புறப்பட்டான்.
வழியில் உத்திரகோச மங்கை குளத்தின் மதகுகளில் படுத்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது உத்திரகோச மங்கை சிவபெருமான் தலத்தில் மார்கழி மாதம் எட்டாம் திருவிழாவை மக்கள் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் சிவன் கோவிலில் நாகமணி ஜொலிப்பதையும், அதன் வெளிச்சம் கோவில் முழுவதும் பிரகாசமாக தெரிவதையும் பெருமையாகப் பேசிக்கொண்டே வந்தனர்.
அதை கேட்ட மலைக்கள்ளன் நாகமணியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான்.
நாகமணியை திருடினால் எந்த வழியில் தப்பிக்கலாம் என்று நினைத்து கோவிலை பலமுறை வலம் வந்தான்.
இறுதியில் மேற்கு புறவாசலின் வழியாக தப்பித்து விடலாம் என்று வழியைக் கண்டு பிடித்தான்.
அன்றிரவு மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோவிலின் கருவறைக்கு சென்றடைந்தான். திடீரென அவனது வலது காலில் படிக்கட்டு இடறி தடுமாறி அவன் தலை சிவபெருமான் பீடத்து முனையில் முட்டி சிவன் காலடியிலேயே இறந்தான்.
எமன் மின்னல் வேகத்தில் வந்து மலைக்கள்ளனுடைய விதியின் ஓலை செல்லரித்துவிட்டது என்று சிவனிடம் கேட்க, சிவ தலத்தில் இறந்ததினால் இவனை சொர்க்கத்திற்கு அனுப்பும்படியும் ஈசன் உத்தரவிட்டார்.
அதன்படி மலைக்கள்ளனைச் சொர்க்கத்திற்கு எமன் அனுப்பி வைத்தான்.
உத்தரகோசமங்கை மண்ணில் நல்லவனோ, கெட்டவனோ பிறந்து இறந்தால் சொர்க்கத்திற்கு போவார்கள் என்பது ஐதீகம்.