கண் மற்றும் மன பிரச்சனைகளை நொடியில் களையும் அவளிவணல்லூர் தலம்
- யாத்திரை சென்றவர் மனம் தெளிந்து மனைவியை ஏற்றுக் கொண்ட தலம் இதுவேயாகும்.
- அவளே இவள் என்று இறைவனே அடையாளம் காட்டிய தலம் ஆதலால் இத்தலம் அவளிவணல்லூர் என்று ஆகியுள்ளது.
அவளிவணல்லூர் என்னும் தலம் சாலியமங்கலத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வைசூரி மற்றும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கும் புனிதத்தலமாக இத்தலம் விளங்குகிறது.
இத்தலத்தினில் பணி செய்து வந்த பூஜை குருக்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்.
அவர்களில் மூத்தவளை ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
அந்த கால கட்டத்தில் அவர் தீர்த்த யாத்திரை போக வேண்டியிருந்ததால் தன் மனைவியை தன் மாமனாரான பூஜை குருக்களின் இல்லத்தில் தங்கும்படி விட்டுச் சென்றார்.
அவர் தீர்த்தயாத்திரையில் இருந்த போது அவருடைய மனைவிக்கு வைசூரி கண்டு கண்கள் குருடாகி விட்டன.
அவருடைய தோற்றமும் மாறிப்போயிருந்தது.
தீர்த்த யாத்திரையையெல்லாம் முடித்துக் கொண்டு தன் மனைவியை அழைத்துப் போக அவர் வந்தபோது தன்னுடைய மனைவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அவளுடைய தங்கையை மனைவி என்று நினைத்து அழைத்து போக எண்ணினார்.
மாமனார் அவள் உன் மனைவி அல்ல.
இவளே உன் மனைவி என்று குருடியாக இருந்தவளைக் காட்டினார்.
அதனை நம்ப மறுத்த அவர் மனைவியின் தங்கையே தன்னுடைய மனைவி என்றும்,
தான் தீர்த்த யாத்திரை முடிந்து வந்து கேட்கும்போது யாரோ ஒருத்தியை என் தலையில் கட்டப் பாார்க்கிறார் என்றும் அவர் ஊர் நடுவே சென்று புகார் செய்தார்.
பூஜை குருக்கள் வருந்தியபடி இறைவனை வேண்ட இறைவன் இடபாாரூடராக அங்கு தோன்றி உன் மனைவியாகிய அவளே இவள் என்று பாார்வையற்ற பெண்ணை அடையாளம் காட்டியருளினார்.
மேலும் அந்த பெண்ணை அங்கிருந்த தீர்த்தத்தில் மூழ்கச் செய்து கண்ணைக் கொடுத்து அருள் புரிந்தார்.
வைசூரியால் ஏற்பட்ட வடுக்கள் எல்லாம் மாறி அவள் முன்பு போலவே திகழ்ந்தாள்.
யாத்திரை சென்றவர் மனம் தெளிந்து மனைவியை ஏற்றுக் கொண்ட தலம் இதுவேயாகும்.
அவளே இவள் என்று இறைவனே அடையாளம் காட்டிய தலம் ஆதலால் இத்தலம் அவளிவணல்லூர் என்று ஆகியுள்ளது.
இந்த வரலாற்றினை மனதில் நிறுத்தி எம்பெருமானை மனம் உருகி வேண்டினால் வைசூரி மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும் என்பது இங்கு பிரசித்தமாக விளங்கி வருகிறது.
மேலும் வராக அவதாரம் எடுத்து பூமியினை அசுரனிடமிருந்து மீட்ட திருமால் அந்தப் பணி முடிந்த பிறகும் ஆவேசம் அடங்காமல் ஆர்ப்பாாட்டம் செய்தார்.
அதன் காரணமாக உயிர்களுக்கு நாசம் ஏற்பட்டது.
அப்போது எம்பெருமான் தோன்றி அந்த வராகத்தினை எம்பெருமானுக்கு வாகனமாக்கி கொண்டார்.
இந்த ரிஷபாாருடராக எம்பெருமான் காட்சி தருவது தருமத்திற்கு வெற்றி தருவதற்காக என்கிற தத்துவத்தை முன்னிலைப்படுத்துவதாகும்.
நோய்கள் விலகுவதோடு மனதிலே ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்த்தருளும் திருத்தலமாகவும் இது விளங்குகிறது.