கந்தவேல் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்தசஷ்டி
- சஷ்டி ஆறு நாட்களும் கந்தபுராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.
- சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கந்தவேல் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்தசஷ்டி
நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூர பத்மனை முருகவேலின் ஞான வேலினால் அழித்து பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.
அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்தசஷ்டி விரதமாகும்.
கந்தசஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.
சஷ்டி ஆறு நாட்களும் கந்தபுராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.
பாம்பன் ஸ்ரீமத்குமர குருபரதாச சுவாமிகள் கந்தபுராணத்தின் சுருக்கமாக முதல்வன் புராண முடிப்பு என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார்.
இதனை பாராயணம் செய்தால் முழு கந்தபுராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். மேலும் குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்தபுராணத்தின் சாரமாகும்.
பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.