ஆன்மிக களஞ்சியம்

கந்தனை வழிபடுங்கள்

Published On 2023-11-19 11:15 GMT   |   Update On 2023-11-19 11:15 GMT
  • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
  • அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க

அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி தாலாட்டினர்.

சிவபெருமான் பிராட்டியாருடன் சரவண பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க,

ஆறு உருவங்களும் ஒரு உருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி "உங்களுக்கு மங்களம் உணடாகுக.

உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தை சூட்டுகிறோம்.

உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டவதாகு"

என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும்,

அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

Tags:    

Similar News