ஆன்மிக களஞ்சியம்

கற்பகநாதர் குளம் விநாயகர் தீர்த்தம்!

Published On 2023-08-26 12:43 GMT   |   Update On 2023-08-26 12:43 GMT
  • “கற்பகநாதர் குளம்” விநாயக தீர்த்தத்திற்கு “கடிக்குளம்” என்ற பெயரும் உண்டு.
  • இத்தலத்து இறைவன் பெயர், “கற்பக நாதர்.

கற்பகநாதர் குளம் விநாயகர் தீர்த்தம்

"கற்பகநாதர் குளம்" விநாயக தீர்த்தத்திற்கு "கடிக்குளம்" என்ற பெயரும் உண்டு.

எனவே, இத்தலத்திற்கு "கடிக்குளம்" என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், "கற்பகநாதர் குளம்" என்றும், "கற்பகனார் கோவில்" என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்து இறைவன் பெயர், "கற்பக நாதர், கற்பகேஸ்வரர்" என்றும், அம்பாள் பெயர், "சௌந்தரநாயகி, பால சௌந்தரி என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது.

இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய "விநாயக தீர்த்தம்" (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

ஒருவர் தமது முன்னோரின் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப் பூவாக மலர்ந்ததாம்.

அப்போது தான் தெரிந்தது. இந்தத் தலமும், தீர்த்தமும் முக்தி தரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.

Tags:    

Similar News