கருணை வடிவமாய் சண்முக சுப்பிரமணியர்
- ஆறு முகங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதியின் கோபுரத்தில் 6 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- சஷ்டி விழா இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும்.
கோவிலில் விநாயகர் சன்னதியை சுற்றிக் கொண்டு வந்தால், சிவன் சன்னதிக்கு பின்னால் மேற்கில், வள்ளி தெய்வானை உடனுறை சண்முக சுப்பிரமணியர் சன்னதி உள்ளது.
சன்னதியின் முன் நின்று துதிக்கும் போது, முருகப் பெருமானின் அழகும், அருளும், கருணையும், நம்மை மெய்மறக்க செய்கின்றன.
"வேலிருக்க வினையில்லை; மயிலிருக்க பயமில்லை" என்ற மெய்மொழிக்கேற்ப பக்தர்களுக்கு நம்மால் துணையாக இருந்து, அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை களைய கையில் வேல் கொண்டு விளங்குகிறார் என்பது சிவசுப்பிரமணியரை எதிரில் நின்று வணங்கும் போது தான் நம்மால் நன்கு உணர இயலும்.
தமிழ் தென்றல் திரு.வி.க.வின் உரைப்படி நிலவுலகத்தின் முதற் கடவுளும், குறிஞ்சி நில தலைவனும், தமிழ் மக்களை காக்க வந்த முதல் துணையும் முருகன் ஆவான்.
முருகு என்றால் அழகு. இளமை, இனிமை என்றும் பொருள்படும். சிவசுப்பிரமணியர் சன்னதிக்கு எதிரில், முருகன் ஏறும் ஊர்தியாகிய மயிலும், அதன்பின் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆறு முகங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதியின் கோபுரத்தில் 6 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சஷ்டி விழா இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுவது விஷேசம்.