- ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.
- ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.
ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.
அதற்கு முன் தொடங்கி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.
இயலாதவர்கள் விரத தினம் ஒருநாள் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம்.
கணவனும், மனைவியும் குடும்பத்தில் கருத்தொருமித்து செயல்பட்டு இன்பமாக வாழ வேண்டும் என்பதே இவ்விரதத்தின் உட்கருத்து.
வழிபாட்டுக்குப் பிறகு 21 நூல்கள் சேர்ந்த 21 முடியுள்ள பட்டு அல்லது நூல் சரட்டை மஞ்சளில் நனைத்துக் கையில் அணிந்து கொள்ள வேண்டும்.
இருபத்தோரு இழைகளிலே கயிறு முறுக்கி நாளுக்கு ஒரு முடியாக,
இருபத்தோரு நாட்களும் ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து நோன்பு நோற்றால்
ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.
அவரவர் விரும்பிய வரத்தையும் தந்தருள்வார் என்று கவுதம முனிவர் கூறியுள்ளார்.
இவ்விரதத்தை இடைவிடாமல் 21 முறைகள் பக்தியுடன் அனுஷ்டித்து வந்தால் சகல பாவமும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
தன தானிய சம்பத்தும், பால் பாக்கியமும், குழந்தை பாக்கியமும் இவ்விரதத்தால் உண்டாகும்.
கணவன் மனைவி மன ஒற்றுமையும், அந்நியோன்யமும் உண்டாகும்.