ஆன்மிக களஞ்சியம்

கோவில் எழுப்பப்பட்ட வரலாறு

Published On 2024-02-25 13:14 GMT   |   Update On 2024-02-25 13:14 GMT
  • ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.
  • அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் ஆஞ்சி மன்னன் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், சங்கடங்கள் தீர்க்க வேண்டி அவரின் அரச வையில் இருந்த ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார்.

அப்போது ஜோதிடர்கள் , மன் னன் அதியமானிடம், "உங்கள் மனசங்கடங்கள் தீர்ந்து நிம்மதியும், வெற்றியும் பெற வேண்டுமானால் கால பைரவருக்கு தனிக்கோவில் கட்ட வேண்டும்.

ஆனால் ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.

அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

எனவே காலபைரவர் அவதரித்த காசிக்கு சென்று கால பைரவர் கோவிலில் திருகங்கை பூஜை செய்து காசி கால பைரவருக்கு சிறப்பு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.

கங்கை நதியில் இருந்து கல்லெடுத்து கால பைரவரின் கோவிலுக்கு சிலை வடிவமைத்து அதற்கான பூஜைகளை செய்து அங்கிருந்து அதியமான்கோட்டைக்கு கொண்டு வந்து கோவில் கட்ட வேண்டும்.

மேலும் கோவில் மகா மண்டபத்தில் ஒன்பது நவக்கோள்களின் சக்கரத்தையும் மகா மண்டப மேல்கூரையில் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும்"என்று தெரிவித்தனர்.

இதன்படி மன்னர் அதியமான், தனது படைகளுடன் காசிக்கு சென்று காசி காலபைரவரின் அருளுடன் சிலையை வடிவமைத்து பூஜைகள் செய்து அதியமான்கோட்டையில் மயானத்தில் கால பைரவரை எழுந்தருள செய்தார்.

Tags:    

Similar News