கோவிலில் வழிபடும் போது இதையெல்லாம் செய்யாதீர்கள்....
- விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
- அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.
கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும்.
கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.
வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.
சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவரக்கும் இடையே போகக்கூடாது.
கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.
வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.
அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும்.
கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.