ஆன்மிக களஞ்சியம்

கோவிலுக்கு வெளியில் வந்து ரோமரிஷிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்

Published On 2024-05-30 10:57 GMT   |   Update On 2024-05-30 10:57 GMT
  • ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.
  • அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.

அந்த நிலையில் நீராடாமல் ஜம்புகாரண்யேஸ்வரரை தரிசனம் செய்ய ரோமரிஷி புறப்பட்டு வந்தார்.

இதை கண்டதும் அவரை கோபுர வாசலிலேயே முருகப்பெருமான் தடுத்து நிறுத்தினாராம்.

இதனால் வேதனை அடைந்த ரோமரிஷி அந்த கோபுர வாசல் அருகிலேயே தவம் இருக்க தொடங்கி விட்டார்.

தினசரி நீராடல் போன்ற புறத்தூய்மையை விட ஆத்மார்த்தமாக நினைக்கும் அவரது அகத்தூய்மையே சிறந்தது என்பதை உலகத்துக்கு உணர்த்தும் வகையில் கோவிலுக்கு வெளியில் வந்து ரோமரிஷிக்கு ஜம்புகாரண்யேஸ்வரர் காட்சி கொடுத்ததாக அந்த ஆலய தல வரலாறில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.

அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.

இந்த முருகருக்கு குமரகுருபரர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரோமரிஷியின் அருளைப் பெற விரும்பும் கிருத்திகை நட்சத்திரத்துக்காரர்கள் கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று ரோமரிஷியின் அதிஷ்டானம் அமைந்துள்ள பகுதியில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும் நிச்சயம் பலன் உண்டு.

கூந்தலூர் ஆலயத்தின் ஈசான்யம் பகுதியில் இந்த அதிஷ்டானம் இருக்கிறது. ஈசான்யம் பகுதியில் நவக்கிரகங்கள் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த தலத்தில் செவ்வாயுடன் தொடர்புடைய முருகப்பெருமான் அங்கு அமர்ந்து இருப்பதால், எத்தகைய செவ்வாய் தோஷமும் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்ததும் விலகி ஓடி விடும் என்பது ஐதீகமாகும்.

சனி கிரக பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் தலமாகவும் ரோமரிஷி அதிஷ்டானம் திகழ்கிறது.

Tags:    

Similar News