ஆன்மிக களஞ்சியம்

கொழுக்கட்டையில் இத்தனை விசயங்களா?

Published On 2024-06-28 11:07 GMT   |   Update On 2024-06-28 11:07 GMT
  • எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.
  • வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களை தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.

விநாயகரின் உருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளை சலவைக்கல், முத்து, பவழம், யானை தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைத்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.

அந்த பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயக பெருமானின் பலவித பெயர்களை சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தை சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது.

எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியை பெற்றுத் தரும்.

எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.

வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களை தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.

குழந்தை சவுபாக்கியத்துடன் அனைத்து கலைஞானமும் பெற்று ஆரோக்கியமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.

Tags:    

Similar News