ஆன்மிக களஞ்சியம்

கிருஷ்ண ஜெயந்தி மாக்கோலம்

Published On 2024-07-26 10:56 GMT   |   Update On 2024-07-26 10:56 GMT
  • வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும்.
  • குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர்.

கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

மாக்கோலம்

வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

வீட்டின் வாயிற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு சேவடிக் கமலங்களை மாக்கோலமாக இடுவார்கள்.

கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லந்தோறும் சென்று வெண்ணெயைத் திருடித் தின்னும்போது, வீடு முழுவதும் வெண்ணெய் சிதறிக் கிடக்கும்.

அவனது கமலப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடுகள் முழுவதும் நிறைந்திருக்கும்.

இந்த நினைவுச் சின்னமாகவே மாக்கோலத்தால் வரையப்பட்ட மாக்கோலங்கள் திகழ்கின்றன.

Tags:    

Similar News