ஆன்மிக களஞ்சியம்

கிருஷ்ண ஜெயந்தி-உறியடி விளக்கும் வாழ்க்கை தத்துவம்

Published On 2023-09-01 12:54 GMT   |   Update On 2023-09-01 12:54 GMT
  • இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.
  • ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

கிருஷ்ண ஜெயந்தி-உறியடி விளக்கும் வாழ்க்கை தத்துவம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் மிக பிரச்சித்தமாக நடைபெறும்.

ஒவ்வொரு ஊரின் மரபுக்கு ஏற்ப உறியடி திருவிழா பல வகைகளாக நடத்தப்படுகிறது.

இந்த விழாவின் பின்னணியில் ஒரு தத்துவம் உள்ளது.

பானை என்பது பரம்பொருள்.

அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது.

பரம்பொருளின் காலடியில் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.

ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது.

லௌகீக வாழ்க்கையில், ஆசா பாசங்களுக்கு இடம் கொடுத்து அல்லல்பட வேண்டியுள்ளது.

இந்த தடைகளையெல்லாம் மீறி, கடந்து, தட்டுத் தடுமாறி பரம்பொருளை நெருங்க வேண்டியதுள்ளது.

அப்போது நமது சிந்தனை, செயல் எல்லாம் பரம்பொருளிடம் சென்று சேர வேண்டும் என்ற ஒரே சிந்தனையாக, உறுதியான சிந்தனையாக இருக்க வேண்டும்.

இந்த ஒரு முக சிந்தனையே அகங்காரம் எனும் உறியடி பானையை உடைக்க வைக்கும்.

அகங்காரம்போய்விட்டால் இறையருளும், முக்தி எனும் பாக்கியமும் தேடி வரும்.

உறியடி திருவிழாவில் இப்படி மாபெரும் தத்துவம் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

கிருஷ்ணர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தத்துவத்தை கொண்டுள்ளது.

அவற்றை உணர்ந்து, புரிந்து கிருஷ்ணரை வழிபட்டால் பரம்பொருளின் அருள் பார்வை பெற்று ஆனந்தமாக வாழலாம்.

Tags:    

Similar News