ஆன்மிக களஞ்சியம்
அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.
அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் (ஸ்ரீ பெரியநாயகம்) குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு கால்களையும் ஞான காண்டம், கரும கண்டம் என்னும் காதுகளையும்,
பரஞானம், அபரஞானம் என்னும் கண்களையும் விதிவிலக்கு என்ற முகத்தையும் வாலையும்.,
ஆகமங்கள் என்னும் அணிகளையும், மந்திரங்களாகிய சதங்கை, கிண்கிணி, மாலை சிலம்பு என்பவைகளையும்
பிரணவமாகிய கடிவாளத்தையும், அறுவகைப் புறச்சமயங்களாகிய போர் செய்யும் சேனைகளை வேருடன்
அழித்ததற்கேற்ற வெற்றியையும், பிரமனது முகங்களாகிய இலாயத்தையும் அண்ட கோடிகளாகிய
குதிரையின் மேல் ஏறி சிவபிரான் போர் வீரராகத் தொணடர்களுடைய பாசக் கயிறு இற்று வீழும்படி
எழுந்தருளி வருகிறார் என்ற உண்மையைக் குதிரை வாகனக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.