குழந்தை பாக்கியம் அருளும் கூழ் கொழுக்கட்டை வழிபாடு
- திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
- ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.
ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து
வழிபட்டால், பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
அம்மனுக்கு பிடித்தமான கூழ், கொழுக்கட்டையை படைத்து வழிபட்டால்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
மேலும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
துளசியை வழிபடுங்கள்...
ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.
ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துனமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால்
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,
இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.
அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால்,
பெண்களின் சாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.