ஆன்மிக களஞ்சியம்

குழந்தை பாக்கியம் அருளும் ஸ்ரீ மகா புத்திர காமேஷ்டி யாகம்

Published On 2024-05-06 11:17 GMT   |   Update On 2024-05-06 11:17 GMT
  • ஸ்ரீமகா புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ள தம்பதிகள் மட்டுமே வரவேண்டும்.
  • யாகம் முடிந்தவுடன் தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்படுகிறது.

சிவகங்கை மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கரா தேவி கோவிலில் காலை 6 மணிக்கு மகாகணபதி யாகத்துடன் தொடங்கும் இந்த யாகம் இரவு 8 மணி வரை நோய், நொடியின்றி 100 வயதுடன் வாழ வேண்டி தன்வந்திரி யாகத்துடன் முடிவடைகிறது.

இந்த புத்திர காமேஷ்டி யாகத்தில் மகப்பேறு, குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து கலந்து கொண்டு புத்திர பாக்கியம் பெற்று உள்ளனர்.

ஸ்ரீமகா புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ள தம்பதிகள் மட்டுமே வரவேண்டும்.

யாகம் முடிந்தவுடன் தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்த வெண்ணை பிரசாதத்தை குழந்தை போல் தவழும் கிருஷ்ணர் படம் முன்பு பூஜை செய்தபின் சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது என பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் உள்ள வேப்பமரத்தின் கீழ் உள்ள குண்டு முத்து மாரியம்மனுக்கு தொட்டில் கட்டியும், இங்கு தரும் கூழ் பிரசாதத்தை சாப்பிட்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளது.

குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பின் குண்டு முத்துமாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதமும் குண்டு முத்துமாரியம்மனுக்கு கூழ்காய்ச்சி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News