ஆன்மிக களஞ்சியம்

குழந்தைப் பேறு அருளும் தீர்த்தம்

Published On 2023-12-23 11:30 GMT   |   Update On 2023-12-23 11:30 GMT
  • “முக்குளம் தன் க்டையானும்” என்றும் “தட மூன்றுடையான்” என்றும் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
  • மக்கள் இத்திருக்குளங்களில் மூழ்கிக் குழந்தைப்பேறு பெறுகின்றனர்.

திருஞானசம்பந்தர்,

"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடும் நினை

வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்

வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"

என்று முக்குளச் சிறப்பைப் பாடுகிறார்.

மேலும் "முக்குளம் தன் க்டையானும்" என்றும் "தட மூன்றுடையான்" என்றும் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

மும்மூர்த்தி தீர்த்தம், மூவிலைச் சூலதீர்த்தம், முக்குள தீர்த்தம், அகர முதலான மூவெழுத்துத் தீர்த்தம், தன்ம தீர்த்தம், தானதீர்த்தம் என்னும் பல பெயர்களால் புராணம் இவைகளை அழைக்கிறது.

மக்கள் இத்திருக்குளங்களில் மூழ்கிக் குழந்தைப்பேறு முதலிய பேறுகளைப் பெறுகின்றனர்.

இதன் கரைகளில் தென்புலத்தார் வழிபாடும், தான தருமங்களும் செய்து பெரும் புண்ணியம் ஈட்டுகின்றனர்.

Tags:    

Similar News