ஆன்மிக களஞ்சியம்
- ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீமகாவிஷ்ணுவை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.
- திருமாலே, சாஸ்திரப்படி மூதேவியை உத்தாலகருக்குத் திருமணம் செய்து வைத்தாராம்.
பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய பல பொருட்களுடன் ஸ்ரீமகாலட்சுமியும் மூதேவியும் தோன்றினார்கள்.
ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீமகாவிஷ்ணுவை மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.
அவ்வமயம் மூதேவி, மூத்தவளான தன் கலயாணத்துக்கு பின்னர்தான் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீமகாவிஷ்ணுவை மணக்கலாம் என்று திட்டவடடமாகக் கூறி விட்டாள்.
மூதேவியை மணந்து கொள்ள யாருமே முன் வராதபோது, உத்தாலகர் என்ற ரிஷி, தானாகவே முன் வந்து,
தன் தவ வலிமையால் மூதேவியின் தீய செயல்கள் எல்லாவற்றையும் அகற்றி விடுவதாகக் கூறி, மூதேவியை மணந்து கொண்டார்.
திருமாலே, சாஸ்திரப்படி மூதேவியை உத்தாலகருக்குத் திருமணம் செய்து வைத்தாராம்.
பின்புதான் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும், ஸ்ரீமகாலட்சுமிக்கும் திருமணம் நடந்ததாம்.
அந்த நாளே தீபாவளித் திருநாளாகும்.