ஆன்மிக களஞ்சியம்

இலட்சக் கணக்கில் குவியும் பக்தர்கள்

Published On 2023-12-29 12:41 GMT   |   Update On 2023-12-29 12:41 GMT
  • திருப்பதி ஆலயத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
  • விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக குவிந்து விடுகிறார்கள்.

திருப்பதி ஆலயத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தப்படி உள்ளது.

பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்த திருப்பதி-திருப்பதி தேவஸ்தானம் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் அந்த கட்டுப்பாடுகளையும் மீறி திருப்பதி-திருமலை ஆலயத்துக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தப்படிதான் உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள சக்கரம் தான் பக்தர்கள் அலை அலையாக செல்வதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருமலையில் கிடைக்கும் உண்டியல் வசூலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தினமும் சராசரியாக ரூ. 2 கோடிக்கு மேல் உண்டியல் வசூல் கிடைக்கிறது. இந்த எண்ணிக்கையும் உயர்ந்தப்படி இருக்கிறது.

முன்பெல்லாம் திருப்பதி ஆலயத்துக்கு ஆந்திராவில் இருந்தும் தமிழகத்தில் மட்டுமே சென்றனர்.

அதிலும் தமிழகத்தில் சென்னை நகர மக்கள் தான் அதிக அளவில் செல்வதுண்டு.

ஆனால் சமீப காலமாக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள்.

வடமாநில இந்தி பேசும் மக்கள் அதிகளவில் திருப்பதி ஆலயத்துக்கு வர தொடங்கி உள்ளனர்.

மும்பை, பெங்களூர், ஐதராபாத் நகரங்களில் இருந்து பக்தர்கள் கார்களில் வரும் வழக்கமும் தொடங்கி உள்ளது.

இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒவ்வொரு ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம் வசதியை கொண்டு வந்தனர்.

இந்த சிறப்பு கட்டணத்திற்கான ஆன்லைனிலும் முன்பதிவு செய்யும் திட்டமும் கொண்டு வரப்பட்டது.

என்றாலும் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இயலவில்லை.

விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக குவிந்து விடுகிறார்கள்.

மொட்டை போடுவது, உண்டியலில் பணம் போடுவது ஆகியவற்றை பெரும்பாலான பக்தர்கள் தவறாமல் செய்கிறார்கள்.


Tags:    

Similar News