- ‘மலைக்கு செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல.
- நாம் எதை சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார்.
ஐயப்ப மாலையின் முக்கியத்துவம் பற்றி நடிகர் நம்பியார் சுவாமிகள் ஒரு தடவை கூறியதாவது:-
'மலைக்கு செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல.
ஓர் அரசருக்கு கிரீடம், முத்திரை மோதிரம் என்பவை எல்லாம் எப்படி தனி அடையாளமோ.,
அதுபோல சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் அடையாளமே அவர்கள் அணியும் மாலைதான்.
நாம் எப்போது மாலை போட்டுக் கொள்கிறோமோ, அப்போதே மாலையுடன் சேர்ந்து ஐயப்பனும் நம்மோட வந்து விடுகிறார்.
'மாலை' என்ற வடிவில் நம்மோடு இருப்பவர் சாட்சாத அந்த ஐயப்பன்தான்.
நாம் எதை சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார்.
நம்மோடு நினைவில் நிறுத்திக் கொண்டால், நமக்கு எந்தக் கெட்ட எண்ணமும் வராது.
தீய பழக்கங்கள் அடியோடு ஒழிந்து விடும்.
அதேபோல முதல் முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்' என்பார் நம்பியார் சாமி.
பழைய மாலை அறுந்துவிட்டால் கூட அதையே சரி செயது வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் நம்பியார்சாமி.