மாங்கல்ய பலம் பெருகும் வெள்ளிக்கிழமை விரதம்
- மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது.
- ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச் சிறப்பு உண்டு.
வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி பெண்கள் அம்மனிடம் வேண்டிக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.
வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என
பெண்கள் வீடுகளிலும் கோவில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம்.
அன்று பெண்கள் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது.
மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை வீடுகளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுசரிப்பார்கள்.
சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள்
விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.
புற்றுக்கு பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றை படைத்து
பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வாடிக்கை.
கூழ்வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல்,
மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், தீக்குண்டம் இறங்குதல் என மாதம் முழுவதுமே
அம்மன் கோவில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது.