மகாமேருவை நூறு முறை சுற்றி வந்த பலனை தரும் தீா்த்தம்
- அநேக அசுவமேத யாகங்கள் செய்த பலனை கொடுப்பதுடன் ஈசுவர ஸாயுஜ்ய பதவியையும் அளிக்கின்றது.
- இப்புண்ணிய பூமியின் பெருமைகளை மகரிஷிகள் காசிகண்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள்.
மகாமக குளம் என்னும் கன்னியதீர்த்தத்தில் நீராடுபவர்களுடைய பாவக் கூட்டங்கள் சூரியனைக்கண்ட பனிபோலும் மறைந்து போகும்.
அநேக அசுவமேத யாகங்கள் செய்த பலனை கொடுப்பதுடன் ஈசுவர ஸாயுஜ்ய பதவியையும் அளிக்கின்றது.
இப்புண்ணிய பூமியின் பெருமைகளை மகரிஷிகள் காசிகண்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள்.
வேறு இடங்களில் செய்யும் பாவம் புண்யசேத்திரத்திலும், புண்ய சேத்திரத்தில் செய்யும் பாவம் காசியிலும், காசியில் செய்யும் பாவம் கும்பகோணத்திலும்,
கும்பகோணத்தில் செய்யும் பாவம் கும்பகோணத்திலும் நாசத்தை அடைகின்றன என்பார்கள்.
அனைத்து விதமான யாக பலன்களையும் கொடுக்கும் தீர்த்தம் இதுவே.
இக்குளத்தை ஒருமுறை சுற்றி வந்தால் மகாமேருவை நூறுமுறை சுற்றி வந்த பலனை தரும் என்பது புராணமாகும்.
நீண்ட நாட்களாக வயதக்கு வராத பெண்கள் மகாமகபெண்களுக்கு பூஜைபடைத்தால் புஷ்பவதிகளாகி கணவர்களுடைய பிரியத்தை அடைகிறார்கள்.