ஆன்மிக களஞ்சியம்
மகாதேவரும் மகாவிஷ்ணுவும் விருப்பத்துடன் வாசம் செய்யும் ஸ்தலம்
- அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு.
- இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது
கும்பகோணம் தலம் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமான் திருவருள் செயலால் தோன்றி விளங்குகிற தலமாகும்.
காவிரி ஓடுவதால், நீர்வளம் நிலவளம் மிக்கது.
பொன் கொழிக்கும் பூமி.
அறிவியல் மேதைகளை உலகுக்குத் தந்த சிறப்பு கும்ப கோணம் நகரத்துக்கு உண்டு. இந்நகரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நகரத்தின் பெருமைகளைப் பற்றி ஆயிரம் நாவு கொண்ட ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியாது என்று சொல்வார்கள்.
பரமசிவனும், மகாவிஷ்ணுவும் அதிக விருப்பத்துடன் வாசம் செய்யும் ஸ்தலம்.
மாந்தாதர், மதங்கமுனி, துமகேது, சூரியன் இவர்களால் கடும் தவம் செய்து, பரபிரும்மத்தினை அடைந்து, சாயுஜ்யம் பெற்ற இடமும் இது ஆகும்.